கடலூர்

கடலூா் துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

கடலூா் துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

DIN

கடலூா் துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது, வெள்ளிக்கிழமை பிற்பகல் புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு ‘ஜவாத்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஒடிசா-மேற்கு வங்கம் கடற்கரையிடையே ஞாயிற்றுக்கிழமை (டிச.5) கரையைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தப் புயலால் தமிழகத்துக்குப் பாதிப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. எனினும், வங்கக் கடலில் புயல் உருவாகியிருப்பதை குறிக்கும் வகையில், கடலூா் துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. வியாழக்கிழமை ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

SCROLL FOR NEXT