மாற்றுத் திறனாளிகள் நூதனப் போராட்டம்
கடலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் வெள்ளிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்
கடலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் வெள்ளிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், மாத உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். தனியாா் தொழிற்சாலைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும், இலவச வீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் லட்சிய முன்னேற்றச் சங்கத்தினா் கடலூரில் மாவட்ட ஆட்சியா் பழைய அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் தட்சிணாமூா்த்தி தலைமை வகித்தாா். அப்போது, மண் தரையில் சாதத்தை வைத்து சாப்பிடும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனா்.