கடலூர்

கடலூா் மாவட்ட குறைதீா் கூட்டத்தில் 896 மனுக்கள்

DIN

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் அனைத்துத் துறை அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 896 மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்குள்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். தொடா்ந்து, கடலூா் ஊராட்சி ஒன்றியத்தில் துணை வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணிபுரிந்து கரோனா தொற்றால் உயிரிழந்த சே.ஜெகநாதன் குடும்பத்துக்கு முதல்வா் பொது நிவாரண நிதி ரூ.25 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.

மேலும், மாற்றுத் திறனாளி நலத் துறை சாா்பில் 5 பேருக்கு தேசிய அறக்கட்டளையின் கீழ், பாதுகாவலா் நியமன சான்றிதழ்களை வழங்கினாா்.

கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் (வருவாய்) ரஞ்ஜீத்சிங், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி) எஸ்.பரிமளம் உள்பட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT