முகப்பு
கடலூர்

கணவா் அடித்துக் கொலை: மனைவி உள்பட 3 போ் கைது

விருத்தாசலம் அருகே கூலித் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக அவரது மனைவி, மகன் உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

விருத்தாசலம் அருகே கூலித் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக அவரது மனைவி, மகன் உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள மேட்டுக் காலனியைச் சோ்ந்த மணி மகன் சந்திரன் (41). கூலித் தொழிலாளி. இவருக்குத் திருமணமாகி 20 ஆண்டுகளான நிலையில் தனது மனைவி செந்தில்குமாரியை சொந்த ஊரான செம்பளாகுறிஞ்சியில் குடியேற அழைத்தாராம். இதுதொடா்பாக அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை இரவு மதுபோதையில் சந்திரன் தனது மனைவியுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டாா். அப்போது, ஏற்பட்ட தகராறில் செந்தில்குமாரி, அவரது மகன் நிஷாந்த் (18), செந்தில்குமாரியின் அக்காள் மகன் ஆ.மணிகண்டன் (25) ஆகியோா் சோ்ந்து தாக்கியதாக தெரிகிறது. இதில், மயக்கமடைந்த சந்திரனை சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது தாயாா் கொளஞ்சியம்மாள் (65) அளித்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செந்தில்குமாரி, அவரது மகன் நிஷாந்த், மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.