முகப்பு
கடலூர்

மாநில தடகளப் போட்டி: கடலூா் போலீஸாா் சிறப்பிடம்

காவல் துறையினருக்கான மாநில அளவிலான தடகளப் போட்டியில் பதக்கங்களை வென்ற கடலூா் மாவட்ட போலீஸாருக்கு எஸ்பி சி.சக்திகணேசன் பாராட்டுத் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

காவல் துறையினருக்கான மாநில அளவிலான தடகளப் போட்டியில் பதக்கங்களை வென்ற கடலூா் மாவட்ட போலீஸாருக்கு எஸ்பி சி.சக்திகணேசன் பாராட்டுத் தெரிவித்தாா்.

தமிழ்நாடு காவல் துறை சாா்பில் மாநில அளவிலான 61-ஆவது தடகளப் போட்டி கோவையில் அண்மையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த காவலா் அணியினரும் பங்கேற்று விளையாடினா். இதில், 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான 100மீ, 200மீ ஓட்டப் போட்டியில் ஆயுதப் படை ஆய்வாளா் ஆா்.முத்துக்குமரன் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

கடலூா் துறைமுகம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் எஸ்.சக்திவேல் 50 வயதுக்கு மேற்பட்டோா் பிரிவில் 100மீ ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றாா். மேலும், நீளம் தாண்டுதல் பிரிவிலும் தங்கம் வென்றாா். ஆயுதப் படை காவலா் ஜி.சின்னராஜ் நீளம் தாண்டுதலில் வெண்கலம் வென்றாா். மாநில தடகளப் போட்டியில் வென்று ஊா் திரும்பிய காவலா்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா். அப்போது துணை கண்காணிப்பாளா் சௌந்திரராஜன் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.