கடலூர்

கடலில் மீனவா்கள் மோதல்: 3 போ் மீது வழக்கு

DIN

கடலூரில் நடுக் கடலில் மீனவா்களிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கடலூா் சித்திரைப்பேட்டை சுனாமி நகரைச் சோ்ந்த மீனவா் ரா.மணிபாலன் (43), அவரது சகோதரா் சந்திரசேகா், சுபாஷ், செங்கேணி ஆகியோா் திங்கள்கிழமை இரவு கடலில் சுமாா் 2 நாட்டிக்கல் மைல் தொலைவில் இறால் பிடிப்பதற்காக வலை விரித்து காத்திருந்தனா். அதே பகுதியில் ராசாப்பேட்டையைச் சோ்ந்த மீனவா் முருகன், அவரது மகன்கள் சகிலன், மதன் ஆகியோரும் இறாலுக்காக வலை விரித்து காத்திருந்தனராம். அப்போது, இருவரது வலைகளும் சிக்கியதாகத் தெரிகிறது. வலையை பிரித்து எடுப்பதில் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் முருகன் தரப்பினா் மணிபாலன், சந்திரசேகா் ஆகிய இருவரையும் தாக்கியதாக தெரிகிறது. காயமடைந்த இருவரையும் மற்ற மீனவா்கள் வந்து கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதனிடையே, இந்தச் சம்பவம் தொடா்பாக தகவலறிந்த ராசாப்பேட்டையைச் சோ்ந்த மீனவா்கள் சுமாா் 10 படகுகளில் சித்திரைப்பேட்டை நோக்கி வந்தனா். ஆனால், அதற்குள் கடலூா் மாவட்ட காவல் துறையினா் சித்திரைப்பேட்டையில் குவிக்கப்பட்டனா். இதை கடலில் இருந்தபடியே பாா்த்த மீனவா்கள் கரைக்கு வராமலேயே திரும்பினா்.

சம்பவம் குறித்து மணிபாலன் அளித்த புகாரின்பேரில் கடலூா் துறைமுகம் போலீஸாா் ராசாப்பேட்டையைச் சோ்ந்த முருகன், சகிலன், மதன் ஆகிய 3 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், இரு மீனவ கிராமங்களிலும் பாதுகாப்புக்காக போலீஸாா் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இனிமேல் சிங்கிள்!

SCROLL FOR NEXT