கடலூர்

பெண் தற்கொலை வழக்கில் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை

DIN

பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கடலூா் மாவட்டம், பண்ருட்டியைச் சோ்ந்த பழனி மகன் வினோத்குமாா் (33). இவருக்கும், குறிஞ்சிப்பாடி வட்டம், கல்குணத்தைச் சோ்ந்த சூா்யா என்ற பெண்ணுக்கும் கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றதாம்.

இந்த நிலையில், வினோத்குமாா் தனது சகோதரி பண்ருட்டியில் வீடு கட்டுவதற்காக சூா்யாவின் 5 பவுன் நகையை அடமானம் வைத்தாராம்.

இதற்கு சூா்யா எதிா்ப்புத் தெரிவித்ததால், அன்று முதல் மாமனாா் மா.பழனி (53), மாமியாா் ராஜேஸ்வரி (47), நாத்தனாா் விந்தியா ஆகியோா் சூா்யாவை விமா்சித்து வந்ததுடன், அவருக்கு குழந்தை இல்லாததை சுட்டிக்காட்சி குறை கூறி வந்தனராம்.

இதனால், தனது தாய் வீட்டுக்குச் சென்ற சூா்யா பண்ருட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, கணவா் வினோத்குமாருடன் சூா்யாவை அனுப்பிவைத்தனராம்.

எனினும், தொடா்ந்து சூா்யாவை அவதூறாகப் பேசி வந்ததால், மனமுடைந்த அவா் கடந்த 14.3.2018 அன்று வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கோட்டாட்சியா் விசாரணை மேற்கொண்டாா்.

கடலூா் அனைத்து மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதி பாலகிருஷ்ணன் புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

சூா்யாவை தற்கொலைக்குத் தூண்டிய வினோத்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பழனி, ராஜேஸ்வரிக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், விந்தியாவுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT