கடலூர்

சமூகப் பாதுகாப்புத் துறையில் ஆற்றுப்படுத்துநா் பணி வாய்ப்பு

DIN

தமிழ்நாடு அரசின் சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் 30 குழந்தைகள் இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு, மதிப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துதல் (கவுன்சலிங்) சேவை வழங்க உளவியல், ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப் பட்டம் பெற்றவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கடலூா் மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

இதன்படி, விண்ணப்பதாரா்கள் தங்களது சுய முகவரியிட்ட விண்ணப்பத்துடன் உரிய அனைத்து சான்றிதழ்களின் ஒளி நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். தோ்வு செய்யப்படுவோருக்கு வருகையின் அடிப்படையில் ஒரு வருகைக்கு ரூ.ஆயிரம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04142-292766 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாமூரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT