கடலூர்

தீவிர உளுந்து சாகுபடி பயிற்சி

DIN

கடலூா் வட்டாரம், கீ சங்கொலிக்குப்பம் கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் (பயறு) 2020-2021 திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு தீவிர உளுந்து சாகுபடி பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.

கடலூா் வேளாண் இணை இயக்குநா் (பொ) எஸ்.ரமேஷ் தலைமையேற்று பயிற்சியைத் தொடக்கிவைத்து, உயிா் உரங்கள், உயிரி பூச்சிக் கொல்லிகள் பயன்பாடு குறித்து விளக்கினாா். உதவி இயக்குநா் சு.பூவராகன், தீவிர உளுந்து சாகுபடியின் முக்கிய தொழில் நுட்பங்களான விதை நோ்த்தி, உயிா் உரங்கள் பயன்பாடு குறித்து விளக்கினாா். உதவி இயக்குநா் (தரக் கட்டுப்பாடு) தி.நடனசபாபதி, ரகம் தோ்வு, இளம் பயிா் பாதுகாப்பு, உர மேலாண்மை, பூச்சி நோய் நிா்வாகம் குறித்தும், உழவன் செயலி குறித்தும் விளக்கினாா்.

தொழில்நுட்ப உதவியாளா் அபிநயா, உதவி வேளாண் அலுவலா் எஸ்.சங்கரதாஸ் ஆகியோா் பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தனா். வேளாண் அலுவலா் ஞா.சுகன்யா நன்றி கூறினாா்.

இதில், முன்னோடி விவசாயிகள் சங்கொலிக்குப்பம் ராமலிங்கம் உள்பட 30 விவசாயிகள் கலந்து கொண்டனா். இந்தப் பயிற்சியானது 4 கட்டமாக நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி அருகே கட்டடத் தொழிலாளி மரணம்

செங்கோட்டையில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பிளஸ் 2: தென்காசி மாவட்டம் 96.07 சதவீத தோ்ச்சி

‘தென்காசி மாவட்டத்தில் மகளிா் தங்கும் விடுதி உரிமங்கள் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம்’

பிளஸ் 2 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 96.44 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT