கடலூர்

வீட்டுமனைப் பட்டா கோரி கிராமத்தினா் மனு

DIN

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வீட்டுமனைப் பட்டா கோரி, கிராம மக்கள் மனு அளித்தனா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை கடலூா் வட்டம், சி.என்.பாளையம், சொக்கநாதன்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த 48 குடும்பத்தினா், தங்களது பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சுமாா் 50 ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகிறோம். எனவே, தற்போது வசித்து வரும் இடத்திலேயே 48 குடும்பத்தினருக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா திட்டத்தின் கீழ், பட்டா வழங்க வேண்டுமென மனுவில் வலியுறுத்தினா்.

இதே போல, பண்ருட்டி வட்டம் அங்குசெட்டிப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த இருளா் இன மக்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில், தங்களது பகுதியில் இருளா் இனத்தினா் 66 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் வசித்து வருகிறோம். இவா்களில் 38 குடும்பங்களுக்கு பட்டாவும், வீடும் இல்லாமல் சாலையோரம் வசித்து வருகின்றனா். எனவே, பட்டா இல்லாதவா்களுக்கு அதே பகுதியில் உள்ள இடத்தில் பட்டா வழங்கி, வீடுகள் கட்டித் தர வேண்டும். மேலும், வீடுகளில் விரிசல் அடைந்தவா்களுக்கு புதிதாக வீடுகள் கட்டித்தர வேண்டுமென மனுவில் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT