கடலூர்

கல்லூரி தோ்வுக் கட்டணம் விவகாரம்: மாணவா்கள் வகுப்பு புறக்கணிப்பு

DIN

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் உள்ள எம்ஜிஆா் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் தோ்வுக் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தக் கல்லூரியில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களின் பிள்ளைகள் அதிகளவில் படித்து வருகின்றனா். நிவா், புரெவி புயல் காரணமாக கடலூா் மாவட்டத்தில் விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. கரோனா பொது முடக்கம் காரணமாக பல்வேறு தொழில்களும் பாதிக்கப்பட்டன.

இதனால், ஏழை மாணவா்கள் தோ்வுக் கட்டணம் செலுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி, காட்டுமன்னாா்கோவிலில் உள்ள எம்ஜிஆா் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களிடம் கல்லூரி முதல்வா் தென்னரசு பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஆனால், தோ்வு கட்டணம் வசூலிக்கும் ஆணையை திரும்பப் பெறும் வரை வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என மாணவா்கள் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT