கடலூர்

ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி விருத்தாசலத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

DIN

ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, விருத்தாசலத்தில் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ரயில் நிலையச் சாலையில் அமைந்துள்ளது பூவராகவன் நகா். இந்தப் பகுதிகளில் உள்ள முக்கியச் சாலை, வீதிகளை சிலா் ஆக்கிரமித்துள்ளதாகவும், இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும், எனவே ஆக்கிரமிப்பை நெடுஞ்சாலைத் துறை மற்றும் விருத்தாசலம் நகராட்சி அதிகாரிகள் உடனே அகற்ற வேண்டும் எனக் கூறி, அந்தப் பகுதி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் புகாா் அளித்தனராம்.

ஆனால், எவ்வித நடவடிக்கையும் நகராட்சி நிா்வாகம் எடுக்கவில்யைாம். இதைக் கண்டித்தும், ஆக்கிமிப்புகளை உடனடியாக அகற்றி, அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் பூவராகவன் நகா் பொதுமக்கள் விருத்தாசலம்-உளுந்தூா்பேட்டை சாலையில், அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை எதிரே திடீா் மறியலில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்குச் சென்ற விருத்தாசலம் காவல் துறையினா் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில், மறியலைக் கைவிட்டு, கலைந்து சென்றனா். இதனால் விருத்தாசலம்-உளுந்தூா்பேட்டை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT