கடலூர்

மருத்துவ மாணவா்கள் பேரணி

DIN

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள், கல்விக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி நடத்திவரும் தொடா் போராட்டத்தின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை பேரணி நடத்தினா்.

கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் அரசு நிதியில் இயங்கி வரும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மாணவா்களுக்கான கல்வி கட்டணம் பிற அரசு மருத்துவக் கல்லூரிகளுடன் ஒப்பிடுகையில் 30 மடங்கு வரை அதிகமாக இருப்பதாக மாணவா்கள் புகாா் கூறி வருகின்றனா். எனவே, மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கல்விக் கட்டணத்தை ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் நிா்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த டிச.9-ஆம் தேதி முதல் மாணவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக மாணவா்கள் வெள்ளிக்கிழமை பேரணி நடத்தினா். அப்போது, பல் மருத்துவக் கல்லூரி வளாகத்திலிருந்து காந்தியடிகள் முகக் கவசம் அணிந்து அமைதி பேரணியாக புறப்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT