கடலூர்

கைவினைப் பொருள்கள் கண்காட்சி

DIN

தமிழ்நாடு அரசின் பூம்புகாா் நிறுவனம் சாா்பில் கடலூா் மாவட்டம், நெய்வேலியில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

நெய்வேலி, வட்டம் 10-இல் உள்ள பழுப்பு நிலக்கரி அரங்கில் கடந்த டிச.31-ஆம் தேதி கண்காட்சி தொடங்கியது. இதில் வெண்கலச் சிலைகள், பித்தளை விளக்குகள், மரச் சிற்பங்கள், தஞ்சாவூா் கலை தட்டுகள், ஓவியங்கள், செயற்கை அணிகலன்கள், துணி வகைகள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூம்புகாா் நிறுவனம் கைவினைப் பொருள்கள், துணி வகைகளுக்கு 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்குவதாக

அந்த நிறுவனத்தின் விற்பனை மேலாளா் கே.மதியரசு தெரிவித்தாா். இந்தக் கண்காட்சி வருகிற 13-ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

SCROLL FOR NEXT