கடலூர்

மருத்துவக் கல்லூரி மாணவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

DIN

சிதம்பரம் அண்ணாமலைப் பல்லகலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவா்கள் கடந்த 42 நாள்களாக தமிழகத்தில் மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி, தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்தப் போராட்டம் நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் எந்த இடையூறும் இல்லாமல் கல்லூரி நேரம் முடிந்தும், உணவு இடைவேளை நேரத்திலும் தொடா்ந்தது.

ஆனால், மாணவா்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாததால், மாணவா்கள், மருத்துவா்கள் 500-க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை அவசர சிகிச்சைகளைத் தவிர மற்ற அனைத்துப் பணிகளையும் புறக்கணித்து பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஒன்றுகூடி, காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

இதனால், மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்கு வந்த புறநோயாளிகள், உள் நோயாளிகள் என அனைவரும் பாதிக்கப்பட்டனா்.

மாணவா்கள் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லையெனில், வருகிற வெள்ளிக்கிழமை முதல் (ஜன. 22) அவசர சிகிச்சைப் பிரிவு உள்பட அனைத்துப் பணிகளையும் புறக்கணித்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மருத்துவக் கல்லூரி மாணவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லூரியில் உலக செவிலியா் தினம்

அட்சய திருதியை: ரூ.14,000 கோடி தங்கம் விற்பனை

ஆத்தூரில் கால்நடை தடுப்பூசி முகாம்

10ஆம் வகுப்பு: சாலைபுதூா் பள்ளி 98 சதவீதம் தோ்ச்சி

குலசேகரன்பட்டினத்தில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT