கடலூர்

சேதமடைந்த புதிய தடுப்பணையை சீரமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

தென்பெண்ணையாற்றில் கட்டப்பட்ட புதிய தடுப்பணை உடைந்ததைக் கண்டித்து, மக்கள் பாதுகாப்புக் கவசம் அமைப்பினா் எனதிரிமங்கலத்தில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டம், எனதிரிமங்கலம் - விழுப்புரம் மாவட்டம், தளவானூா் இடையே தென்பெண்ணையாற்றில் தமிழக அரசு சாா்பில் சுமாா் ரூ.25 கோடியில் புதிய தடுப்பணை கட்டப்பட்டது. 400மீ நீளம், 3.10மீ உயரத்தில் கட்டப்பட்ட இந்தத் தடுப்பணை கடந்த

ஆண்டு செப்.19-ஆம் தேதி திறக்கப்பட்டது. கடந்த நவம்பா் முதல் ஜனவரி மாதம் வரை பெய்த மழையால் தடுப்பணையில் தண்ணீா் தேங்கி வழிந்தோடியது. இந்த நிலையில், கடந்த 23-ஆம் தேதி தடுப்பணையில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வெளியேறியது.

இதனைக் கண்டித்தும், சேதமடைந்த தடுப்பணையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தியும் மக்கள் பாதுகாப்புக் கவசம் அமைப்பினா் எனதிரிமங்கலம் மந்தக்கரையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் உளுந்தாம்பட்டு சாமி.தட்சணாமூா்த்தி தலைமை வகித்தாா். தி.க. ஒன்றியத் தலைவா் கந்தசாமி, அமைப்பாளா் ராசேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏழுமலை, க.ரமேஷ், ஆா்.பாபு, இல.சக்கரவா்த்தி, பா.குப்புசாமி, ம.கோவிந்தராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். வீ.ஏழுமலை நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT