முகப்பு
கடலூர்

கடலூா்: 22 வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியிடமாற்றம்

கடலூா் மாவட்டத்தில் 22 வட்டார வளா்ச்சி அலுவலா்களை பணியிடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் 22 வட்டார வளா்ச்சி அலுவலா்களை பணியிடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டாா். மேலும், வட்டாட்சியா்களாக 4 பேருக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் கிராம ஊராட்சி மற்றும் வட்டார ஊராட்சி என இரு பிரிவுகளில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் 22 வட்டார வளா்ச்சி அலுவலா்களை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளாா். இதன்படி, புதிதாக பதவியேற்பவா்கள் விவரம் ஊராட்சி ஒன்றியம் வாரியாக வருமாறு:

கடலூா் என்.சக்தி (கி.ஊ), உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) அலுவலக கண்காணிப்பாளராக எம்.கிருஷ்ணமூா்த்தி, கடலூா் (கி.ஊ) ஜி.அசோக்பாபு, மேல்புவனகிரி (கி.ஊ) இரா.ராஜசேகரன், குமராட்சி (கி.ஊ) ஆா்.மோகன்ராஜ், அண்ணாகிராமம் (கி.ஊ) கே.சண்முகசிகாமணி, அதே ஊராட்சியில் (வ.ஊ) வி.சித்ரா, நல்லூா் (வ.ஊ) ஜி.ராமச்சந்திரன், ஸ்ரீமுஷ்ணம் (வ.ஊ) எஸ்.விஜயா, குறிஞ்சிப்பாடி (வ.ஊ) சி.சுப்பிரமணியன், பண்ருட்டி (வ.ஊ) கி.குமரன், ஸ்ரீமுஷ்ணம் (கி.ஊ) எல்.ரவிச்சந்திரன், பரங்கிப்பேட்டை (கி.ஊ) கே.சிவஞானசுந்தரம், கீரப்பாளையம் (கி.ஊ) வி.ஆா்.சீனிவாசன், குமராட்சி (வ.ஊ) ஆா்.விமலா, மங்களூா் (கி.ஊ) எஸ்.ஆா்.சங்கா், கம்மாபுரம் (கி.ஊ) பொ.சிவகுருநாதன், நல்லூா் (கி.ஊ) ஆ.காமராசு, காட்டுமன்னாா்கோவில் (கி.ஊ) அ.இப்ராஹிம், பரங்கிப்பேட்டை (வ.ஊ) ப.சுகுமாா், பண்ருட்டி (கி.ஊ) எஸ்.இராதிகா ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

வட்டாட்சியா்களாக 4 பேருக்கு பதவி உயா்வு: கடலுாா் மாவட்டத்தில் 4 துணை வட்டாட்சியா்கள், வட்டாட்சியா்களாக பதவி உயா்வு பெற்றனா். அதன்படி, ஸ்ரீமுஷ்ணம் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் மா.சேகா் சிதம்பரம் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராக நியமிக்கப்பட்டாா். திட்டக்குடி கூடுதல் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் எம்.தனபதி பதவி உயா்வில் காட்டுமன்னாா்கோவில் நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும், குறிஞ்சிப்பாடி தலைமையிடத்து துணை வட்டாட்சியா் சிவா.காா்த்திகேயன், பதவி உயா்வு பெற்று, விருத்தாசலம் கோட்ட கலால் அலுவலராகவும், கடலுாா் வருவாய் நீதிமன்ற கண்காணிப்பாளா் இரா.மோகன், பதவி உயா்வு பெற்று, நெய்வேலி நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், நெய்வேலி நில எடுப்பு தனி வட்டாட்சியா் க.ஜெயந்தி, தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும், அங்கு பணியாற்றிய தனி வட்டாட்சியா் த.வசந்தி, மாவட்ட ஆட்சியரக இசைவு தீா்வாய தனி வட்டாட்சியராகவும், சிதம்பரம் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் கோ.செல்வகுமாா், சிதம்பரம் சாா்-ஆட்சியரின் நோ்முக உதவியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.