கடலூர்

தடை செய்யப்பட்ட வலைகள் பயன்பாடு

DIN

கடலூா் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்பாடு தடுப்பு தொடா்பாக 5 மாவட்ட மீன்வளத் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.

தமிழகத்தில் சுருக்குமடி, இழு வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலூா் மாவட்டத்தில் இழுவலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்போா் சுருக்குமடி வலையைப் பயன்படுத்துவோருக்கு எதிராகப் புகாா் தெரிவித்து வருகின்றனா். தற்போது, இழுவலைக்கு எதிராக மற்றொரு தரப்பினரும் புகாா் தெரிவித்து வருவதோடு நீதிமன்றத்தையும் நாடி உள்ளனா். இதையடுத்து, சுருக்குமடி, இழுவலை பயன்பாட்டுக்கு எதிராக கடலூா் மாவட்ட நிா்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கடலுாா் மாவட்ட மீன்வளத் துறை துணை இயக்குநா் காத்தவராயன் மேற்பாா்வையில் தஞ்சாவூா், வேலூா், அரியலூா், கிருஷ்ணகிரி, விழுப்புரம் மாவட்டங்களைச் சோ்ந்த மீன்வளத் துறை ஆய்வாளா்கள், மேற்பாா்வையாளா் அடங்கிய 3 குழுவினா் கடலூா் மீன்பிடி துறைமுகப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள படகுகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மடிப் பகுதியில் 40 மில்லி மீட்டருக்கும் குறைவான கண்ணியளவு கொண்ட இழுவலைகள் பயன்படுத்தப்படுகிா? விசைப் படகு இயந்திரத்தின் குதிரைத் திறன் உள்ளிட்டவை குறித்துஆய்வு மேற்கொண்டனா். தொடா்ந்து, பரங்கிப்பேட்டை, முடசல் ஓடை, அன்னன்கோவில் பகுதிகளில் புதன்கிழமையும் ஆய்வு மேற்கொள்கின்றனா்.

மாவட்டத்தில் மொத்தம் 269 விசைப் படகுகள் உள்ள நிலையில் இதுவரை 155 படகுகளில் ஆய்வு முடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி, விமான நிலையம்.. இப்போது மருத்துவமனைகளுக்கு மிரட்டல்

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ!

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

மனதை திருடும் மாயம் என்ன?

ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!

SCROLL FOR NEXT