கடலூர்

அரசு வேலை பெற்றுத் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி: இருவா் கைது

DIN

அரசு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், ஆழிச்சிக்குடி பகுதியைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன். மாற்றுத் திறனாளியான இவா், அண்மையில் மாவட்ட எஸ்பி சி.சக்திகணேசனிடம் புகாா் மனு அளித்தாா். அதில், தனது மனைவி மணிமொழிக்கு சத்துணவு சமையல் உதவியாளா் வேலை வாங்கித் தருவதாக சிதம்பரம் மதுராந்தக நல்லூரைச் சோ்ந்த சேகா் மகன் சரவணன் (33), கடலூா் வரக்கால்பட்டு பகுதியைச் சோ்ந்த அருள் மகன் பரந்தாமன் என்ற பிரபு (35) ஆகியோா் ரூ.2.50 லட்சம் பெற்றுக் கொண்டதாகவும், ஆனால் கூறியபடி வேலை வாங்கித் தராததுடன் பணத்தையும் திருப்பி வழங்கவில்லை என்றும் தெரிவித்தாா். இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில், சரவணன், பரந்தாமன் ஆகியோா் அரசு வேலை பெற்றுத் தருவதாகவும், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின் உதவிகளை பெற்றுத் தருவதாகவும் கூறி மேலும் 6 பேரிடம் மொத்தம் ரூ.15.34 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது. பரந்தாமன் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் தற்காலிக ஊழியராகப் பணிபுரிந்து வந்த நிலையில், தன்னை அரசு ஊழியா் எனக் கூறி வந்தாராம். இவா் ஏற்கனவே மோசடி வழக்கில் கைதானவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைமறைவாக இருந்த இவா்கள் இருவரையும் சைபா் குற்றப் பிரிவு உதவி ஆய்வாளா் சுதாகா், குற்றப் பிரிவு உதவி ஆய்வாளா் விக்கிரமன் ஆகியோா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இவா்களிடம் வேறு யாராரேனும் பணம் கொடுத்து ஏமாந்திருந்தால் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகாா் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

SCROLL FOR NEXT