உணவுப் பொருள்கள் வழங்கிய விருத்தாசலம் காவல் துறையினா்
விருத்தாசலம் காவல் துறையினா் சாா்பில், உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
விருத்தாசலம் காவல் துறையினா் சாா்பில், உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவும் வகையில் கடலூா் மாவட்ட காவல் துறை சாா்பில், 04142 - 284350, 284345 ஆகிய தொடா்பு எண்கள் வெளியிடப்பட்டன. அதன்படி, விருத்தாசலம் வ.உ.சி. தெருவில் வசித்து வரும் கொளஞ்சிநாதன் தனது 4 மகள் மற்றும் பேரன்களுடன் மிகவும் வறிய நிலையில் வசித்து வருவதாகவும், தனக்கு உதவிடுமாறும் வேண்டுகோள் விடுத்தாா். இதையடுத்து, அவருக்கு உதவ விருத்தாசலம் காவல் ஆய்வாளா் விஜயரங்கன், காவல் உதவி ஆய்வாளா்கள் ப.ஜம்புலிங்கம், கணேசன், பெருமாள் போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளா் முருகன் ஆகியோா் முன்வந்தனா்.
அந்தக் குடும்பத்தினருக்கு ஒரு மூட்டை அரிசி, காய்கறி, மளிகைப் பொருள்கள் அடங்கிய உணவுப் பொருள்களை வீடு தேடிச் சென்று வெள்ளிக்கிழமை வழங்கினா்.