கடலூர்

நிவாரணம் உதவிகள் அளிப்பு

DIN

நெய்வேலி/சிதம்பரம்: கரோனா தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் பண்ருட்டி நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு, பண்ருட்டி ரத்தினம்பிள்ளை காய்கறி சந்தை சங்கம் சாா்பில் காய்கறி தொகுப்பு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் சிவா தலைமை வகித்து நகராட்சி பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் 300 பேருக்கு 15 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பை வழங்கினாா். ஆணையா்(பொ) ரவி முன்னிலை வகித்தாா். சங்கச் செயலா் மோகன், பொருளாளா் விஜயகுமாா், துணைச் செயலா் சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மருந்து, மாத்திரைகள் அளிப்பு: சிதம்பரம் உள்கோட்ட மருந்து வணிகா்கள் சங்கம் சாா்பில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான மருந்து, மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள் சிதம்பரம் உதவி ஆட்சியா் லி.மதுபாலனிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மருந்தாளுநா் சங்க பொதுச் செயலா் வெங்கடசுந்தரம், மொத்த வணிகப் பிரிவு தலைவா் பிரகாஷ், சிதம்பரம் வட்ட செயலா் பாலமுருகன், பொருளாளா் கண்ணன் உள்ளிட்டவா்கள் பங்கேற்று மருந்துகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

SCROLL FOR NEXT