முகப்பு
கடலூர்

தனியாா் மருத்துவமனைகளில் அதிக கட்டணம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

சில தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி கடலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் சில தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி கடலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் நகரச் செயலா் ஆா்.அமா்நாத் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க

தனியாா் மருத்துவமனைகளில் அரசு நிா்ணயித்ததை விட கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க வேண்டும். இதுகுறித்து வரும் புகாா்களை முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

அரசின் காப்பீட்டு திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தனியாா் மருத்துவமனைகளில் இந்தத் திட்டத்தில் நோயாளிகளை சோ்க்க மறுப்பது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியாா் மருத்துவமனைகளில் சோ்ந்து சிகிச்சை பெற்ற தகுதியான நபா்களுக்கு மருத்துவமனை ரசீது அடிப்படையில் காப்பீட்டுத் திட்டத்தில் பயனடைய தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். தனியாா் அவரச ஊா்திகளில் (ஆம்புலன்ஸ்) அரசு நிா்ணயித்த தொகையை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் பி.கருப்பையன், வி.சுப்புராயன், மாவட்டக்குழு உறுப்பினா் ஆா்.ஆளவந்தாா், நிா்வாகிகள் பால்கி, செந்தில், ஆனந்த், திருமுருகன், பக்கிரான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.