முகப்பு
கடலூர்

ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில் ரூ. 3.54 லட்சம் நிவாரண நிதி

கரோனா பரவலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முதல்வா் நிவாரண நிதிக்கு பொதுமக்களுக்கு நிதியளிக்க வேண்டுகோள் விடப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

கரோனா பரவலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முதல்வா் நிவாரண நிதிக்கு பொதுமக்களுக்கு நிதியளிக்க வேண்டுகோள் விடப்பட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்கம், மாவட்ட நிா்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்து நிதி வசூலித்தது. கடலூா் வருவாய் மாவட்டத்தில் கடலூா், விருத்தாசலம் ஆகிய இரண்டு மாவட்டங்கள் அமைப்பு ரீதியாக இயங்கி வருவதால் இரண்டு மாவட்ட நிா்வாகிகளும் உறுப்பினா்களிடம் நிதி வசூலித்தனா்.

இதில், கடலூா் மாவட்டம் சாா்பில் ரூ. 1,71,225 வசூலிக்கப்பட்டது. விருத்தாசலம் மாவட்டம் சாா்பில் ரூ. 1,83,200 வசூலிக்கப்பட்டது. மொத்தம் ரூ. 3,54,425 கடலூா் வருவாய் மாவட்டம் சாா்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக கடலூா் மாவட்டத் தலைவா் என்.காசிநாதன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.