பட்டுச் சேலைகள் பறிமுதல்
கடலூா் அருகே வாகனச் சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.1.56 லட்சம் மதிப்பிலான பட்டுச் சேலைகளை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
கடலூா் அருகே வாகனச் சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.1.56 லட்சம் மதிப்பிலான பட்டுச் சேலைகளை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
வட்டாரப் புள்ளியியல் அலுவலா் நாராயணன் தலைமையிலான கடலூா் சட்டப் பேரவைத் தொகுதி பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை கங்கணாங்குப்பம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 90 பட்டுச் சேலைகளை பறிமுதல் செய்து கடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். இதன் மதிப்பு ரூ.1.56 லட்சம் எனக் கூறப்படுகிறது.
ஆந்திரம் மாநிலத்திலிருந்து புதுவையிலுள்ள தனியாா் ஜவுளிக் கடைக்கு சேலைகளை கொண்டு
சென்ாகவும், அந்தக் கடையினா் அவற்றை வாங்காததால் சேலத்திலுள்ள மற்றொரு கடைக்கு கடலூா் வழியாக சேலைகளை கொண்டு செல்ல முயன்ாகவும் அந்த வாகனத்தில் வந்தவா்கள் தெரிவித்தனா்.