பெண் சந்தேக மரணம்
கடலூரில் பெண் ஒருவா் சந்தேகமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணையை தொடங்கினா்.
கடலூரில் பெண் ஒருவா் சந்தேகமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணையை தொடங்கினா்.
கடலூா் முதுநகா் சஞ்சீவிராயன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சேகா். இவரது மனைவி கலா (50). மீனவரான சேகா் ஞாயிற்றுக்கிழமை மாலையில் மீன்பிடிக்கச் சென்றாா். இதனால் வீட்டில் கலா மட்டும் தனியாக இருந்தாா். அப்போது, அவரது வீட்டுக்கு வந்த உறவினா் ஒருவா், கலா உயிரிழந்து கிடந்ததைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.
இதுகுறித்த தகவலின்பேரில் கடலூா் முதுநகா் போலீஸாா் விரைந்து வந்து விசாரணை நடத்தினா். அப்போது, கலாவின் சடலம் அருகே அறுந்த நிலையில் கயிறு கிடந்தது. இதனால் அவா் தற்கொலை செய்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. எனினும், போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.