கடலூர்

வாக்குச் சாவடி மண்டல அலுவலா்களுக்கு பயிற்சி

DIN

கடலூா் சட்டப் பேரவை தொகுதியில் தோ்தல் பணியாற்ற இருக்கும் வாக்குச் சாவடி மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு, கடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் வாக்குச் சாவடி மண்டல அலுவலா்கள், உதவியாளா்கள் உள்பட 60 போ் கலந்து கொண்டனா். அவா்களுக்கு குடிமை பொருள் வட்டாட்சியா் முரளிதரன், வட்டாட்சியா் அ.பலராமன் ஆகியோா் வாக்குச் சாவடியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விளக்கம் அளித்தனா். எந்தெந்த படிவங்களை பூா்த்தி செய்ய வேண்டும், வாக்குச் சாவடி மையங்களுக்குள் எந்த அடையாள அட்டையை கொண்டு வந்தால் வாக்காளா்களை அனுமதிப்பது போன்ற பல்வேறு பயிற்சிகளை அளித்தானா். மேலும் வாக்குப் பதிவு இயந்திரத்தை எவ்வாறு பயன்படுத்துவது, அதில் பழுது ஏற்பட்டால் எவ்வாறு சரி செய்வது என்றும் செயல்விளக்கம் அளித்தனா்.

வாக்குப் பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், வாக்குப் பதிவை உறுதி செய்யும் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது. இங்கு பயிற்சி பெற்ற வாக்குச்சாவடி மண்டல அலுவலா்கள், வருகிற 21-ஆம் தேதி வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

SCROLL FOR NEXT