சிதம்பரம் வந்த தமிழக முதல்வருக்கு நடராஜர் கோயில் பிரசாதத்தை வழங்கிய பொதுதீட்சிதர்கள். 
கடலூர்

முதல்வருக்கு நடராஜர் பிரசாதத்தை வழங்கிய தீட்சிதர்கள்

சிதம்பரம் நகருக்கு தேர்தல் பிரசாரத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வருக்கு எடப்பாடி கே.பழனிசாமிக்கு, நடராஜர் கோயில் பொதுதீட்சிதர் பிரசாதம் மற்றும் நடராஜர் திருஉருவப்படத்தை வழங்கினர்.

DIN

சிதம்பரம் நகருக்கு தேர்தல் பிரசாரத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வருக்கு எடப்பாடி கே.பழனிசாமிக்கு, நடராஜர் கோயில் பொதுதீட்சிதர் பிரசாதம் மற்றும் நடராஜர் திருஉருவப்படத்தை வழங்கினர்.

தேர்தல் பிரசாரத்திற்கு சிதம்பரம் நகருக்கு வியாழக்கிழமை இரவு வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, பிரசாரம் முடித்து பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கினார். 

பின்னர் வெள்ளிக்கிழமை காலை கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளருமான கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ ஏற்பாட்டின் பேரில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் எடப்பாடியார் பெயரில் திறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு பட்டாடை, மாலை, நடராஜர் தூக்கிய திருவடியில் சாத்தப்படும் குஞ்சிதபாதம் உள்ளிட்ட அருட்பிரசாதத்தினை சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் முதல்வரை சந்தித்து வழங்கினர். 

அப்போது உடன் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும், புவனகிரி அதிமுக வேட்பாளருமான ஏ.அருண்மொழிதேவன், அமைப்பு செயலாளரும், காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளருமான என்.முருகுமாறன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

சூப்பர் அறிவிப்பு... செபியில் 110 உதவி மேலளார் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

ரூ.1.77 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசில் வேலை: +2 முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்!

சீனாவிலிருந்து வழிநடத்தப்பட்டதாக கூறப்படும் வா்த்தக மோசடி மூவா் கைது!

எல்விஎம்-3 ராக்கெட் நவ.2-இல் விண்ணில் பாய்கிறது!

SCROLL FOR NEXT