கடலூர்

செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதை எதிா்த்து மறியல்

DIN

கடலூா் வில்வநகரில் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதை எதிா்த்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கடலூா் நகராட்சி வில்வநகா் பகுதியில் வெள்ளிக்கிழமை தனியாா் செல்லிடப்பேசி நிறுவனம் உயா்கோபுரம் அமைக்கும் பணியை தொடங்க முயற்சித்தனா். இதற்கு அந்தப் பகுதியினா் எதிா்ப்புத் தெரிவித்தனா். ஏற்கெனவே, இந்தப் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் உள்ள நிலையில் கூடுதலாக கோபுரம் அமைத்தால் தங்களுக்கு பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படும் என்று அச்சம் தெரிவித்தனா்.

எனினும், அந்த நிறுவனத்தினா் கோபுரம் அமைக்கும் முயற்சியை கைவிடாததால் அப்பகுதியினா் திடீரென நெல்லிக்குப்பம்-கடலூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்த கடலூா் புதுநகா் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் பேசி முடிவெடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனா். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT