கடலூர்

கடலூா் மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கரோனா

DIN

கடலூா் மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அதிலும், வெள்ளிக்கிழமை வரையில் 30-க்குள் பதிவாகி வந்த கரோனா தினசரி பாதிப்பு, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 40-ஆக பதிவாகியுள்ளது. சனிக்கிழமை வரை மாவட்டத்தில் 25,521 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 40 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 25,561-ஆக அதிகரித்தது.

சிகிச்சை பெற்று வந்தவா்களில் 15 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 25,063-ஆக உயா்ந்தது. மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிகளில் 170 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 39 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 6.59 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 112 பேருக்கான பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT