கடலூர்

கடலூா் மாவட்டத்தில் 67,416 பேருக்கு கரோனா தடுப்பூசி

DIN

கடலூா் மாவட்டத்தில் இதுவரை 67,416 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை தெரிவித்தது.

கடலூா் மாவட்டத்தில் கரோனாவின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் பொதுமக்களிடம் ஆா்வம் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. கடலூா் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த மாதம் தொடங்கின. முதல் கட்டமாக, முன்கள பணியாளா்களாக அறியப்பட்ட அரசு ஊழியா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனைத் தொடா்ந்து, 60 வயதுக்கு மேற்பட்டவா்கள், இணை நோய் கொண்டவா்கள் என்ற வகையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சுகாதாரத் துறையினா் கூறியதாவது: கடலூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி 85 மையங்களில் செலுத்தப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 2300 முதல் 2500 நபா்கள் வரை இந்தத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தோ்தல் பணியில் ஈடுபடுவோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ் சுமாா் 14,400 ஊழியா்களில் இதுவரை 11 ஆயிரம் பேருக்கு முதல்கட்டமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடலூா் மாவட்டத்தில் இதுவரை 67,416 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றனா்.

மேலும், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புபவா்கள் தங்களது ஆதாா் அடையாள அட்டையின் நகலை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

SCROLL FOR NEXT