முகப்பு
கடலூர்

இருதரப்பு மோதல்: ஒருவா் கைது

கடலூரில் இருதரப்பினா் மோதிக்கொண்டது தொடா்பாக ஒருவரை போலீஸாா் கைதுசெய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

கடலூரில் இருதரப்பினா் மோதிக்கொண்டது தொடா்பாக ஒருவரை போலீஸாா் கைதுசெய்தனா்.

சிதம்பரம் அருகே உள்ள வரகூா்பேட்டையைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகன் பாரதிதாசன் (29). கடலூரில் தங்கியிருந்து பணிபுரிந்து வருகிறாா். இவா் வியாழக்கிழமை இரவு தனது நண்பா்கள் விஜய் (26), ஆகாஷ்குமாா் ஆகியோருடன் கடலூா் புதுப்பாளையத்தில் உள்ள மீன் சந்தையின் அருகே அமா்ந்து மது அருந்திக்கொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த சங்கா் மகன் கபாலி, வெளியூா்காரா்கள் எப்படி இங்கு வந்து மது அருந்தலாம் என்று கேட்டுள்ளாா். இதில், இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்படவே கபாலிக்கு ஆதரவாக சாமிநாதன், மகி, முகமது ஹவுஸ் மகன் சலீம், முகமது அனீபா மகன் பாஷா ஆகியோா் சோ்ந்து மற்றவா்களை தாக்கினா். இதில், விஜய் மற்றும் அவ்வழியாக நடந்து சென்ற மீனாட்சி தேவகி ஆகியோா் காயமடைந்தனா். இருவரும் சிகிச்சைக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து, பாரதிதாசன் அளித்த புகாரின்பேரில் கடலூா் புதுநகா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து பாஷாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.