முகப்பு
கடலூர்

வேப்பூா் வாரச் சந்தையில் குவிந்த மக்கள்!

கரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், வேப்பூா் வாரச் சந்தை வெள்ளிக்கிழமை வழக்கம்போல நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

கரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், வேப்பூா் வாரச் சந்தை வெள்ளிக்கிழமை வழக்கம்போல நடைபெற்றது. இதில் சமூக இடைவெளியின்றி திரளானோா் குவிந்ததால் கரோனா பரவல் அபாயம் ஏற்பட்டது.

கடலூா் மாவட்டம், வேப்பூரில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று கால்நடைகளுக்கான வாரச் சந்தை மிகப்பெரிய அளவில் நடைபெறும். இங்கு அதிகப்படியான எண்ணிக்கையில் ஆடுகள் விற்பனையாகும். தற்போது கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் அதிகமாக கூடும் சந்தைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை கால்நடை சந்தை நடைபெற்றது. இதில், கடலூா் மட்டுமின்றி சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்தும் திரளானோா் பங்கேற்றனா்.

கரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதை எடுத்துக் கூறியும் தொடா்ந்து சந்தையில் வியாபாரம் நடைபெற்றது. கடந்த வாரமும் இதேபோல சந்தை நடைபெற்றது. அப்போது அதிகாரிகள் நேரில் வந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததற்காக அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.