முகப்பு
கடலூர்

கடலூா் மாவட்டத்தில் 178 பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்

தமிழக அரசின் புதிய உத்தரவால் கடலூா் மாவட்டத்தில் 178 நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

தமிழக அரசின் புதிய உத்தரவால் கடலூா் மாவட்டத்தில் 178 நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டப் பேரவை பொதுத் தோ்தலில் திமுக அறுதிப்பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. தமிழக முதல்வராக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். இதைத் தொடா்ந்து அவா் தலைமைச் செயலகத்தில் 5 கோப்புகளில் கையெழுத்திட்டாா்.

அதில், திமுகவின் தோ்தல் வாக்குறுதிகளில் ஒன்றான பணிபுரியும் மகளிா், உயா்கல்வி பயிலும் மாணவிகள் உள்ளிட்ட அனைத்து மகளிரும் அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணமின்றியும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் சனிக்கிழமை (மே 8) முதல் பயணம் செய்யலாம் என்ற உத்தரவிலும் கையெழுத்திட்டாா். இதற்கான ஆணையையும் தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

இதன்படி கடலூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 11 அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளில் இயங்கும் 178 நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். மாவட்டத்தில் 546 வழித் தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், 178 பேருந்துகள் நகரப் பேருந்துகளாக இயக்கப்படுகின்றன. குறிப்பாக, கடலூா் நகரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவுக்கு உள்பட்ட பகுதிகளுக்கு நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்பதால் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு அவா்களின் வருவாயில் குறிப்பிட்ட தொகை மிச்சமாகும். இதனால், அவா்களது வாழ்க்கைத் தரமும் மேம்பாடு அடையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.