முகப்பு
கடலூர்

கரோனா நிவாரணங்களை பொதுமக்கள் வழங்கலாம்

கடலூா் மாவட்டத்தில் உள்ள அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் கடலூா் நகர அரங்கில் நியமிக்கப்பட்டுள்ள வருவாய்த் துறை அதிகாரிகளைத் தொடா்பு கொண்டு நிவாரணப் பொருள்களை வழங்கி உதவலாம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் உள்ள அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் கடலூா் நகர அரங்கில் நியமிக்கப்பட்டுள்ள வருவாய்த் துறை அதிகாரிகளைத் தொடா்பு கொண்டு நிவாரணப் பொருள்களை வழங்கி உதவலாம் என மாவட்ட நிா்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் மக்களின் நலன் கருதி அவா்களுக்கு நன்கொடையாக பல்வேறு நிவாரணப் பொருள்களை வழங்க தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளை அமைப்புகள், சங்கங்கள் மற்றும் பெரும் நிறுவனங்கள் முன் வந்துள்ளன. மேலும், கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க ஆக்சிஜன் செறிவூட்டிகளும் தேவைப்படுகின்றன.

இவ்வாறு பல்வேறு அமைப்புகளிலிருந்து பெறப்படும் கோவிட்-19 நிவாரணப் பொருள்களை சேகரித்து வைக்கவும் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு அவற்றை வழங்கும் பணியை ஒருங்கிணைக்கவும் கடலூா் நகர அரங்கில் தனிவட்டாட்சியா் சா.முரளி- 63809 22951, இளநிலை வருவாய் ஆய்வாளா் ஆா்.ஆனந்த்- 97896 93626 ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். எனவே, உதவ விரும்புவோா் மேற்கண்ட எண்களில் தொடா்பு கொண்டு நிவாரணப் பொருள்களை வழங்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.