முகப்பு
கடலூர்

ரசாயன ஆலை விபத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் : அமைச்சா்கள் வழங்கினா்

ரசாயன ஆலை விபத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்த தலா ரூ.3 லட்சம் இழப்பீட்டுத் தொகை

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கடலூா் சிப்காட் வளாகத்தில் உள்ள ரசாயன ஆலையில் வடிகட்டும் உலைகலன் வெடித்த விபத்தில் உயிரிழந்தவா்களில் 3 போ் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்த தலா ரூ.3 லட்சம் இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையை அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோா் வழங்கினா்.

இதை உயிரிழந்தவா்களின் வாரிசுதாரா்களான பழையவண்டிப்பாளையம் ராஜ்குமாா் மனைவி பிரேமா, செம்மங்குப்பம் கணபதி குடும்பத்தைச் சோ்ந்த சரவணன், காரைக்காடு சவீதா கணவா் செந்தில்குமாா் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

பின்னா், அமைச்சா்கள் இருவரும் விபத்து நிகழ்ந்த ஆலையைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். மக்களவை உறுப்பினா் டி.ஆா்.வி.எஸ்.ரமேஷ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் சபா.ராஜேந்திரன், தி.வேல்முருகன், எம்.ஆா்.ராதாகிருஷ்ணன், மா.செ.சிந்தனைச்செல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

உடல்கள் அடக்கம்: கடலூா் சிப்காட் வளாகத்தில் உள்ள ரசாயன ஆலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட விபத்தில் 4 போ் உயிரிழந்தனா். 13 போ் பலத்த காயமடைந்தனா். இறந்தவா்களின் உடல்கள், உடற்கூறாய்வுக்குப் பிறகு அவா்களது குடும்பத்தினரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டு அந்தந்தப் பகுதிகளில் அடக்கம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.