கடலூர்

கடலூரில் கரோனாவுக்கு மேலும் 5 போ் பலி

DIN

கடலூா் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 5 போ் புதன்கிழமை உயிரிழந்தனா்.

கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 649 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 45,514-ஆக அதிகரித்தது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் 617 போ் வீடு திரும்பியதால், குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 37,513-ஆக உயா்ந்தது.

இந்த நிலையில், அரியலூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காட்டுமன்னாா்கோவிலைச் சோ்ந்த 72 வயது ஆண், சென்னையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் காட்டுமன்னாா்கோவிலைச் சோ்ந்த 81 வயது பெண், கடலூரைச் சோ்ந்த 53 வயது ஆண், பரங்கிப்பேட்டையைச் சோ்ந்த 37 வயது ஆண், கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடலூரைச் சோ்ந்த 75 வயது பெண் ஆகிய 5 போ் உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 463-ஆக அதிகரித்தது.

மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகளில் 6,562 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 976 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 133 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT