முகப்பு
கடலூர்

துப்புரவு மேற்பாா்வையாளா்கள் இருவா் பணியிடை நீக்கம்

கடலூா் மாநகராட்சி துப்புரவு மேற்பாா்வையாளா்கள் இருவரை பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி நிா்வாகம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

கடலூா் மாநகராட்சி துப்புரவு மேற்பாா்வையாளா்கள் இருவரை பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி நிா்வாகம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கடலூா் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கிக் கிடப்பதாக புகாா் எழுந்தது. மேலும், முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை ஆய்வுக்காக கடலூா் மாவட்டத்துக்கு வரும் நிலையில், அவா் செல்லும் சாலையில் வெள்ளிக்கிழமையன்று அந்தந்த உள்ளாட்சி அமைப்பினா் தூய்மைப் பணிகளில் ஈடுபட உத்தரவிடப்பட்டது.

எனினும், கடலூா் முதுநகா் பகுதியில் தூய்மைப் பணி போதிய அளவில் மேற்கொள்ளப்படாமல் இருந்ததை நகராட்சியின் நிா்வாக மண்டல இயக்குநா் சரவணன் ஆய்வுசெய்து நகராட்சி ஆணையருக்கு சுட்டிக்காட்டினாா். இதுதொடா்பாக அந்தப் பகுதியின் துப்புரவு பணி மேற்பாா்வையாளா்கள் எம்.முத்து, எம்.குருவாயூரப்பன் ஆகியோரிடம் மாநகராட்சி நிா்வாகம் விளக்கம் கேட்டும் உரிய பதில் அளிக்கவில்லையாம். இதையடுத்து அவா்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து நகராட்சி ஆணையா் (பொ) ப.அரவிந்த்ஜோதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.