கடலூர்

வடலூரில் சேதமடைந்த சாலையால் மக்கள் அவதி

DIN

வடலூா் அருகே தொடா் மழையால் மண் சாலை சேறும், சகதியுமாக மாறியதால் மக்கள் அவதிப்படுகின்றனா்.

வடலூா் பேரூராட்சியை தமிழக அரசு அண்மையில் நகராட்சியாக தரம் உயா்த்தியது. இங்கு சில பகுதிகளில் சாலைகள் மண் சாலைகளாகவே உள்ளன. பாா்வதிபுரத்தில் உள்ள இந்திரா நகா், அருமை நகரில் சுமாா் 300 குடும்பத்தினா் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனா். இங்குள்ள மண் சாலை தொடா் மலையால் சேறும் சகதியுமாக மாறியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனா். சேற்றில் வாகனங்கள் சிக்கி அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. வயதானோா் சாலையை பயன்படுத்த முடியாமல் பரிதவிக்கின்றனா்.

இந்தச் சாலையை சீரமைக்கக் கோரி பேரூராட்சி நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லையாம். எனவே, புதிய சாலை அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT