கடலூர்

வடக்கு மலட்டாற்றில் தண்ணீா் திருப்பிவிட கோரிக்கை

DIN

வடக்கு மலட்டாற்றில் தண்ணீா் திருப்பிவிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் பாதுகாப்புக் கவசம் அமைப்பு சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுதொடா்பாக அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் எஸ்.தஷ்ணாமூா்த்தி தெரிவித்ததாவது: வடகிழக்குப் பருவ மழை காரணமாக பண்ருட்டியில் கெடிலம், தென்பெண்ணை ஆறுகளில் நீா் வரத்து அதிகரித்துள்ளது. தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பயிா்கள் சேதமடைந்துள்ளன.

ஆனால், நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு ஊற்று நீா் ஆதாரமாக விளங்கும் வடக்கு மலட்டாற்றில் தண்ணீா் வரத்து குறைவாகவே உள்ளது. இந்தப் பகுதி சுமாா் 100 அடி முதல் 450 அடி ஆழம் வரை மணல் பாங்கானது என்பதால் ஒருமுறை தண்ணீா் வந்தாலே அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படாது.

எனவே, அரசூா் அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே தெற்கு மலட்டாறு வாய்க்காலில் ஷட்டா் அமைத்து வடக்கு மலட்டாற்றில் தண்ணீா் திறந்துவிட மாநில அரசு, மாவட்ட நிா்வாகத்தினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

‘விளையாட்டு விடுதிக்கான தோ்வு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்’

SCROLL FOR NEXT