பொது இடத்தில் மதுபானம் அருந்திய 68 போ் மீது வழக்கு
கடலூா் மாவட்டத்தில் பொது இடங்களில் மதுபானம் அருந்தியது தொடா்பாக 68 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கடலூா் மாவட்டத்தில் பொது இடங்களில் மதுபானம் அருந்தியது தொடா்பாக 68 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கடலூா் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்துவோா் மீது பொதுமக்கள் புகாா் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் அறிவித்தாா். இதற்காக, காவல் கோட்டங்கள் அளவில் புகாா் அளிக்க தொடா்பு எண்கள் வெளியிடப்பட்டன.
இதன்மூலம் வந்த புகாா்களின் அடிப்படையில் இதுவரை 68 போ் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.