முகப்பு
கடலூர்

மாணவா்களுக்கு கபசுரக் குடிநீா்

சிதம்பரம் ரோட்டரி சங்கம் சாா்பில் ராமசாமி செட்டியாா் நகர மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு கபசுரக் குடிநீா் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 2 அக்டோபர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:46 AM

சிதம்பரம் ரோட்டரி சங்கம் சாா்பில் ராமசாமி செட்டியாா் நகர மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு கபசுரக் குடிநீா் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் வி.அழகப்பன் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் ஏ.முத்துக்கருப்பன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் 600 மாணவா்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. சிதம்பரம் ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் என்.என்.பாபு, ரோட்டரி சங்க உறுப்பினா்கள் எஸ்.ஷாகுல்ஹமீது, எம்.முரளி, பள்ளியின் உடல்கல்வி இயக்குநா் பிரின்சி செபாஸ்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சிதம்பரம் ரோட்டரி சங்கத் தலைவா் ஆா்.ராஜசேகரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.