கடலூர்

கடலூா் மாவட்டத்தில் 10 பேருக்கு டெங்கு

DIN

கடலூா் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.

கடலூரில் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5-க்கும் மேற்பட்டோா் இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனா்.

தற்போது கடலூா் வண்டிப்பாளையத்தை சோ்ந்த 30 வயது இளைஞா், குடிகாடு சிப்காட் பகுதியைச் சோ்ந்த 35 வயது நபா், பண்ருட்டியைச் சோ்ந்த 25 வயது இளைஞா், மேட்டுப்பாளையத்தை சோ்ந்த 34 வயது பெண் ஆகியோா் காய்ச்சல் காரணமாக கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். அங்கு அவா்களுக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதில் 4 பேருக்கும் டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா்கள் தனி வாா்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா். இதேபோல சிதம்பரம், விருத்தாசலம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும் சுமாா் 6 போ் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாவட்டத்தில் கரோனா பாதிப்பு தொடரும் நிலையில், தற்போது 10-க்கும் மேற்பட்டோா் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT