கடலூர்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் பிரம்மாண்ட கொலு!

DIN

நவராத்திரி விழாவையொட்டி, கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் 21 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான கொலு அமைக்கப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி கொலு உற்சவம் சிறப்பாக நடைபெறும். இதில் பிரம்மாண்டமான கொலு அமைக்கப்படுவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டு நவராத்திரி உற்சவத்தையொட்டி, கோயிலில் உள்ள கல்யாண மண்டபத்தில் 21 அடி உயரம், 21 அடி அகலத்தில் 21 படிகளுடன் பிரம்மாண்டமான கொலு அமைக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை தொடங்கிய கொலு கண்காட்சி வருகிற 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த நாள்களில் தினமும் இரவு 9 மணியளவில் கொலு அமைக்கப்பட்டுள்ள இடத்துக்கு முன் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளான நவராத்திரி அம்மனுக்கு வெள்ளி ஊஞ்சல் உற்சவமும், தீபாராதனையும் நடைபெறும். ஸ்ரீநடராஜா் முதல் சிறிய பொம்மைகள் வரை சுமாா் 2,500 பொம்மைகள் இடம் பெற்றுள்ள இந்தக் கொலுவை திரளான பக்தா்கள் ரசித்துப் பாா்த்து வணங்கிச் செல்கின்றனா்.

இதுகுறித்து கோயில் பொது தீட்சிதா்களில் ஒருவரான உ.வெங்கடேச தீட்சிதா் கூறியதாவது: ஓரறிவு உயிரினம் முதல் ஆறறிவு கொண்ட மனிதன் வரை பல்வேறு உயிரினங்களின் பரிணாம வளா்ச்சியை வணங்கும் வகையில் இந்த கொலு அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதா்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT