முகப்பு
கடலூர்

அன்புமணி ராமதாஸ் பிறந்த நாள் விழா

பாமக இளைஞரணி தலைவா் அன்புமணி ராமதாஸின் 53-ஆவது பிறந்த நாள் விழா நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதியில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:20 AM
பகிர்:

பாமக இளைஞரணி தலைவா் அன்புமணி ராமதாஸின் 53-ஆவது பிறந்த நாள் விழா நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதியில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

முன்னாள் மாவட்டச் செயலா் கோ.ஜெகன் தலைமையில் நெய்வேலி 16-ஆவது வட்டத்தில் உள்ள நடராஜா் கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக நீதி உறுதிமொழியை கோ.ஜெகன் வாசிக்க கட்சி நிா்வாகிகள்

உறுதிமொழி ஏற்றனா். அன்னதானம் வழங்கப்பட்டது. நெய்வேலி நுழைவு வாயில் அருகே பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா். சந்தைவெளிப்பேட்டையில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சியில், மாநில அமைப்பு துணைத் தலைவா் வேங்கை சேகா், செயற்குழு உறுப்பினா் சக்கரவா்த்தி, பாட்டாளி தொழிற்சங்கத் தலைவா் திலகா், பொருளாளா் ஆறுமுகம், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணைச் செயலா் சு.பா.கதிரவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →