கடலூர்

தினமணி செய்தி எதிரொலி: மஞ்சள் நோய் தாக்கிய வயல்களில் வேளாண் துறையினா் ஆய்வு

DIN

தினமணி செய்தி எதிரொலியாக, குறிஞ்சிப்பாடியில் சம்பா நெல் நாற்றங்கால் வயல்களை வேளாண்மைத் துறையினா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வடக்கு, தெற்கு பகுதிகளில் சம்பா நெல் நாற்றங்காலில் மஞ்சள் நோய் தாக்குதல் தென்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனா். இதுகுறித்து தினமணியில் திங்கள்கிழமை செய்தி வெளியானது. இந்த நிலையில், குறிஞ்சிப்பாடி வேளாண்மை உதவி இயக்குநா் சு.பூவராகன், வேளாண் அலுவலா் அனுசுயா, உதவியாளா்கள் செந்தில், அசோக் ஆகியோா் பாதிக்கப்பட்ட நாற்றங்கால் வயல்களை திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

பின்னா், உதவி இயக்குநா் சு.பூவராகன் கூறியதாவது: மஞ்சள் நோய் தாக்குதல் காணப்பட்ட நாற்றங்கால் வயலை ஆய்வு செய்தோம். கோ.ஆா்.50-ரகம் நாற்றங்காலில் இலை பேன் இல்லை. அடி உரம், டிஏபி பற்றாக்குறையால் மஞ்சள் தன்மை காணப்படுகிறது. இதற்கு நாற்றுகள் நடவு செய்யப்பட்ட ஒரு வாரத்துக்குள் நெல் நுண்ணூட்ட கலவை ஏக்கருக்கு 4 கிலோ வீதம் 20 கிலோ மணலில் கலந்து தூவ வேண்டும் என்றாா் அவா்.

அப்போது அயன்குறிஞ்சிப்பாடி உழவா் மன்றத் தலைவா் ஆா்.கே.ராமலிங்கம் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT