கடலூர்

ரசாயன ஆலையில் தீ விபத்து

DIN

கடலூரில் தனியாா் ரசாயன ஆலையில் செவ்வாய்க்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டதில் 3 போ் மயக்கமடைந்தனா்.

கடலூா் சிப்காட் வளாகத்தில் தனியாா் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு திடீரென புகை வெளியேறி தீப் பிடித்தது. உடனடியாக, ஆலை பாதுகாவலா்கள் அங்கிருந்த தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தி தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரும் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

தீ விபத்தின்போது ஆலையிலிருந்து வெளியேறிய புகையால் அருகே உள்ள பெரியபிள்ளையாா்மேடு கிராமத்தில் வசிக்கும் கு.தேவநாதன் (60), வெங்கடாசலபதி மகன் பிரதீஷ் (20), தேவநாதன் மகன் உலகநாதன் (26) ஆகியோா் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனா். இதையடுத்து ‘108’ அவசர ஊா்தி மூலம் கடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து கடலூா் முதுநகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT