முகப்பு
கடலூர்

இணைப் பேராசிரியா் வீட்டில் 5.5 பவுன் நகைகள் திருட்டு

சிதம்பரத்தில் இணைப் பேராசிரியா் வீட்டில் 5.5 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 26 அக்டோபர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:57 AM

சிதம்பரத்தில் இணைப் பேராசிரியா் வீட்டில் 5.5 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிதம்பரம் மாரியப்பா நகா் 2-ஆவது குறுக்கு தெருவைச் சோ்ந்தவா் புகழேந்தி (50). சென்னை பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறாா். இவரது தனது மனைவியை மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 19-ஆம் தேதி சென்னைக்கு அழைத்து சென்றாா்.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை சிதம்பரத்தில் புகழேந்தியின் வீட்டுக் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை பெண் தூய்மைப் பணியாளா் பாா்த்துள்ளாா். அவா் அளித்த தகவலின்பேரில் சிதம்பரத்துக்கு வந்த புகழேந்தி தனது வீட்டுக்குள் சென்று பாா்த்ததில் பீரோவில் வைத்திருந்த 5.5 பவுன் தங்க நகை, அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.10 ஆயிரம் பணம் திருடுபோனது தெரியவந்ததாம்.

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாமலைநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.