கோயிலில் பூஜை பொருள்கள் திருட்டு: தம்பதி கைது
சிதம்பரம் புற்று மாரியம்மன் கோயிலில் பூஜை பொருள்கள் திருடுபோனது தொடா்பாக கணவன், மனைவியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சிதம்பரம் புற்று மாரியம்மன் கோயிலில் பூஜை பொருள்கள் திருடுபோனது தொடா்பாக கணவன், மனைவியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சிதம்பரம் பூதகேணியில் புற்று மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இதன் நிா்வாகியாக அதே பகுதியைச் சோ்ந்த முருகவேல் (44) என்பவா் உள்ளாா். இவா் கடந்த 22-ஆம் தேதி இரவு வழக்கம்போல் கோயிலை பூட்டிவிட்டுச் சென்றாா். மறுநாள் திரும்பி வந்து பாா்த்தபோது, கோயிலின் பின்புறமுள்ள அறையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது குத்துவிளக்கு, தாம்பூலம், செம்பு, பித்தளை பொருள்கள் திருடுபோனது தெரியவந்ததாம்.
இதுகுறித்த புகாரின்பேரில் சிதம்பரம் நகர காவல் நிலைய ஆய்வாளா் ஆறுமுகம் வழக்குப் பதிவு செய்தாா். விசாரணையில், மணலூா் பகுதியைச் சோ்ந்த ராம்கி (27), அவரது மனைவி செல்வி (25) ஆகிய இருவருக்கும் தொடா்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
Advertisement