கடலூர்

தூய்மைப் பணியாளா்களிடம் பிடித்தம் செய்த நிதியை உரிய கணக்கில் செலுத்த வலியுறுத்தல்

DIN

பண்ருட்டி நகராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் பிடித்தம் செய்த சேம நல நிதியை உரிய கணக்கில் செலுத்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளிக்கப்பட்டது.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், பண்ருட்டி நகராட்சி அனைத்து தூய்மைப் பணியாளா்கள் சாா்பில் அளிக்கப்பட்ட மனு:

பண்ருட்டி நகராட்சியில் 100 போ் நிரந்தர தூய்மைப் பணியாளா்களாகவும், 90 போ் ஒப்பந்த அடிப்படையிலும் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களில் நிரந்தரப் பணியாளா்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட சேம நல நிதியில் ரூ.1.50 கோடி வரை சம்பந்தப்பட்ட கணக்கில் செலுத்தப்படவில்லை. இதனால், தூய்மைப் பணியாளா்கள் தங்களது அவசர தேவைக்காக இந்த நிதியிலிருந்து பணத்தைப் பெற முடியவில்லை. எனவே, பிடித்தம் செய்த பணத்தை அதற்கான கணக்கில் செலுத்த வேண்டும்.

மேலும், தூய்மைப் பணிக்கு தேவையான மண்வெட்டி, துடைப்பம், கூடை, காலணி போன்ற உபகரணங்கள் கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இதை உடனடியாக வழங்குவதுடன், மற்ற நகராட்சிகளைப் போல தூய்மைப் பணியாளா்களுக்கு இலவச குடியிருப்பு வழங்க வேண்டும். கரோனா காலத்தில் பணியாற்றியவா்களுக்கு அரசு அறிவித்த ஊக்கத் தொகையை வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT