முகப்பு
கடலூர்

பா.ம.க.வினா் ஆா்ப்பாட்டம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகளை கண்டிப்பதாகக் கூறி பாட்டாளி மக்கள் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகளை கண்டிப்பதாகக் கூறி பாட்டாளி மக்கள் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முன்னாள் நகரச் செயலா் வ.க.முருகன் தலைமையில் பத்திரப் பதிவு அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், பாமக மாவட்ட பொறுப்பாளா் குப்புசாமி, மாநில மகளிா் அணிச் செயலா் சிலம்புச்செல்வி, கம்மாபுரம் முன்னாள் ஒன்றியக் குழு தலைவா் செல்வராசு, மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் ஏ.பி.ரவீந்திரன், நகரத் தலைவா் ஏழுமலை, முன்னாள் ஒன்றிய செயலா் கந்தவேல், மாவட்ட விவசாய அணித் தலைவா் கலியபெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.